ஷா ஆலம், மே 16: மே 18 அன்று சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு கோலா சிலாங்கூர் மாவட்ட வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் புக்கிட் மெலாவத்தியில் உள்ள பாரம்பரிய விளையாட்டு அருங்காட்சியதிற்கு வருகை புரிபவர்களுக்கு நுழைவு இலவசம்.
இந்த சலுகை உள்ளூர் குடிமக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பாடாட் (PADAT) தெரிவித்துள்ளது.
“சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, கோலா சிலாங்கூர் மாவட்ட வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் பாரம்பரிய விளையாட்டு அருங்காட்சியகத்திற்கு வருகை புரியும் அனைத்து மலேசியர்களுக்கும் கட்டணம் விதிக்கப்படாது” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு அருங்காட்சியகத்திலும் உள்ளூர் வருகையாளர்களிடமிருந்து RM3 என குறைந்த டிக்கெட் விலை கடந்த ஆண்டு நவம்பர் 1 முதல் வசூலிக்கப்படுகிறது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு RM8 கட்டணமாக வசூலிக்கப்படும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (OKU) கட்டணம் இல்லை.


