SELANGOR

இலவச உணவைப் பெற பொதுமக்களுக்கு வாய்ப்பு - எம்பிஎஸ்ஏ

15 மே 2024, 12:04 AM
இலவச உணவைப் பெற பொதுமக்களுக்கு வாய்ப்பு - எம்பிஎஸ்ஏ

ஷா ஆலம், மே 15: இன்று ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியின் மூலம் மேடன் செலேரா, செக்‌ஷன் 2இல் இலவச உணவை பெற பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் முதல் 300 jளர்களுக்குத் தலா RM10 ஒதுக்கீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என எம்பிஎஸ்ஏ சமூக மேம்பாட்டு இயக்குனர் ஷாஹ்ரின் அஹ்மட் கூறினார்.

“சமூகத்திற்கு உதவுவது மற்றும் பங்களிக்கவும் நாங்கள் முதல் முறையாக இத்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

“கடந்த மாதத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற 300 பேருக்கு இலவச எரிபொருள் நிரப்பும் திட்டத்தின் தொடர்ச்சி இதுவாகும்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஷா ஆலமைச் சுற்றியுள்ள உயர்கல்வி நிறுவன மாணவர்கள், தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களை இலக்காகக் கொண்டு இலவச உணவுத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஷாரின் கூறினார்.

இந்த திட்டத்தை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் நடத்த எம்பிஎஸ்ஏ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மேலும் பல குடியிருப்பாளர்களும் நன்மைகளை அனுபவிப்பர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.