ஷா ஆலம், மே 13: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் நான்கு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.
இன்று கிள்ளான் உத்தாமா போலா கெராஞ்சாங் மைதானம் (பண்டார் பாரு கிள்ளான்), தாமான் புக்கிட் சுபாங் இரவு சந்தை (கோத்தா அங்கேரிக்), தாசிக் பகின்டா, கம்போங் டத்தோ அபு பக்கார் பகின்டா (டெங்கில்) மற்றும் மேடான் செலாரா பெட்ரோனாஸ் செமினி (செமினி) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


