SELANGOR

 சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து மூன்று ஷட்டில் வேன்கள் ஏற்பாடு

24 ஏப்ரல் 2024, 6:57 AM
 சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து மூன்று ஷட்டில் வேன்கள் ஏற்பாடு

ஷா ஆலம், ஏப் 24: சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள மாநிலத்தின் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்விற்காகச் சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்களின் வசதிக்காக மூன்று ஷட்டில் வேன்களை உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

மாவட்ட கல்வி அலுவலகம், ஜாலான் டத்தோ தபால் மற்றும் நகரின் தபால் அலுவலகம் முன்புறம் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் இன்று முதல் இச்சேவை கிடைக்கும் என உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இச்சேவை காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும்.

"அசௌகரியத்தைக் குறைப்பதற்கும், அனைத்துத் தரப்பினரும் வழக்கம் போல் தினசரி வணிகத்தை மேற்கொள்ள உதவுவதற்கும் எம்பிஎச்எஸ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது" என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சாலையின் ஒரு பகுதியை மட்டுமே மூடுவதால், ஜாலான் அப்துல் ஹமீட், ஜாலான் டத்தோ தபால், ஜாலான் ராசதுரை மற்றும் ஜாலான் டத்தோ பாலாய் போன்ற பிற வழிகளை இன்னும் பயன்படுத்த முடியும் என்று எம்பிஎச்எஸ் மேலும் கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.