SELANGOR

ரவாங் தொகுதியின் சமூகச் சேவை மையத்தில் ஜேகேஎம் கவுண்டர் திறப்பு

23 ஏப்ரல் 2024, 8:08 AM
ரவாங் தொகுதியின் சமூகச் சேவை மையத்தில் ஜேகேஎம் கவுண்டர் திறப்பு

ஷா ஆலம், ஏப் 23: மாதம் ஒருமுறை ரவாங் தொகுதியின் சேவை மையத்தில் சமூக நலத்துறை சேவை கவுண்டர் (ஜேகேஎம்) திறக்கப்படும்.

இந்த மாதத்திற்கான கவுண்டர் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என்று சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் தெரிவித்தார்.

"இதில் ஏற்பாடு செய்யப்பட்ட சேவைகளில், ஜேகேஎம் வழங்கிய உதவிகளுக்கான விண்ணப்பங்கள் அல்லது அவற்றின் தொடர்பான தகவல்களைப் பற்றி விளக்குதல் ஆகியவை அடங்கும்.

"ரவாங்கிலிருந்து ஜேகேஎம் அலுவலகம் தொலைவில் அமைந்திருப்பதால், கோம்பாக் ஜேகேஎம்முடன் சந்திப்பு நடந்த போது, எனது வேண்டுகோளின்படி ஒவ்வொரு மாதமும் ஜேகேஎம் கவுண்டர் சேவை ரவாங் தொகுதியின் சேவை மையத்தில் ஏற்பாடு செய்யப்படும்.

"இது குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு உதவியாக இருக்கும், ஏனெனில் தூரம் அதிகமாக உள்ளது. எனவே சேவை மையத்தில் மாதத்திற்கு ஒரு முறை இக்கவுண்டரைத் திறக்கும்படி கேட்டுக் கொண்டேன்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஜே.கே.எம் அதிகாரிகளின்  இச்சேவை விண்ணப்பதாரர்களிடம்   உள்ள ஐயங்களையும்  விரைவாக  தீர்க்க  உதவும் என்று வெய் கியாட் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.