ஷா ஆலம், ஏப் 22: ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெற்ற கோத்தா அங்கெரிக் தொகுதின் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் சுமார் 5,000 குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தா அங்கேரிக் தொகுதி சேவை மையம், ஹிஜ்ரா சிலாங்கூர், சிலாங்கூர் போதைப்பொருள் தடுப்பு சங்கம் (பெமடாம்) மற்றும் சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டதாகச் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
"இந்த விழா நெருங்கிய நட்பை உருவாக்குகிறது மற்றும் சமூகத்தை ஒன்றிணைக்கிறது. மேலும், இந்நிகழ்வில் பலவிதமான சுவையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன," என்று அவரை சந்தித்தபோது கூறினார்.
நஜ்வான் விருந்தினர்களுடன் பழகுவதற்கும், குழந்தைகளுக்கு டுவெட் ராயா வழங்குவதற்கும் நேரத்தை செலவிட்டார். விருந்தினர்களை மகிழ்விப்பதற்காகப் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் முகமட் கம்ரி கமருடின், சிலாங்கூர் இஸ்லாமிய மதக் கவுன்சில் (மைஸ்) தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் மற்றும் ஹிஜ்ரா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மரியா ஹம்சா ஆகியோரும் கலந்து கொண்டனர்.


