SELANGOR

கோல குபு பாருவில் மாநில நிலையிலான நோன்புப் பெருநாள் உபசரிப்பு- கலந்து சிறப்பிக்க பொது மக்களுக்கு அழைப்பு

22 ஏப்ரல் 2024, 2:55 AM
கோல குபு பாருவில் மாநில நிலையிலான நோன்புப் பெருநாள் உபசரிப்பு- கலந்து சிறப்பிக்க பொது மக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஏப் 22- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஏப்ரல்

27ஆம் தேதி கோல குபு பாரு நகரில் நடைபெறவிருக்கும் ‘ரியோ ராயா

கித்தா சிலாங்கூர்‘ நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து

கொள்ள பொது மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இரவு 8.00 மணிக்கு தொடங்கும் இந்த உபசரிப்பில் பல்வேறு

சுவாரஸ்யமான நிகழ்வுக்ளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில

அரசுச் செயலகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்களுடன் கூடிய விருந்துசரிப்பு,

பிரபல கலைஞர்களின் படைப்புகள், பெருநாள் பண அன்பளிப்பு, வாண

வேடிக்கை ஆகியவையும் அந்த நிகழ்வுகளில் அடங்கும் என அது

தெரிவித்தது.

ரியோ ராயா பெருநாள் பொது உபசரிப்புக்கு மெருகூட்ட தவறாது நாம்

அனைவரும் கலந்து கொள்வோம். கித்தா சிலாங்கூர் 2024 நிகழ்வில்

சந்திப்போம் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.