SELANGOR

உயர்கல்விக் கட்டணத் திட்டத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்வீர்- இந்திய மாணவர்களுக்கு வேண்டுகோள்

19 ஏப்ரல் 2024, 8:27 AM
உயர்கல்விக் கட்டணத் திட்டத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்வீர்- இந்திய மாணவர்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், ஏப் 19– குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய உயர்கல்விக்கூட மாணவர்களுக்குக் கல்விக் கட்டண உதவித் தொகையை சிலாங்கூர் மாநில அரசு வழங்கவிருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு  அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக்கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கூடிய பட்சம் 5,000 வெள்ளியும் டிப்ளோமா கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கூடிய பட்சம் 3,000 வெள்ளியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த கல்விக் கட்டணம் ஒரு மாணவருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அந்த உதவித் தொகை சம்பந்தப்பட்ட அரசாங்க அல்லது தனியார் உயர்கல்விக்கூடங்களுக்கு நேரடியாக அனுப்பப்படும்.

சிலாங்கூரில் பிறந்த அல்லது இம்மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கும் மேல் வசிக்கும் இந்திய மாணவர்கள் இந்த நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்த கல்வி நிதிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அல்லது தனியார் உயர் கல்விக்கூடங்களில் தற்போது  பயின்று கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும்.

மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்நிதிக்கு விண்ணப்பம் செய்யத் தகுதியுடையவர்களாவர்.

இந்த கல்வி கட்டண நிதிக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதிநாள் இம்மாதம் 30 ஆம் தேதியாகும்.

இந்த இலவச கல்விக் கட்டண திட்டம் தொடர்பான மேல் விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

அலுவலக முகவரி

PEJABAT YB TUAN PAPARAIDU A/L VERAMAN,

EXCO Sumber Manusia & Pembasmian Kemiskinan Negeri Selangor, Tingkat 5, Bangunan Sultan Salahuddin Abdul Aziz Shah, 40503 Shah Alam, Selangor Darul Ehsan.

TEL: 03-55447307

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.