SELANGOR

உயர்கல்வி நிறுவன உதவித்தொகைக்கான (HPIPT) விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

19 ஏப்ரல் 2024, 7:29 AM
உயர்கல்வி நிறுவன உதவித்தொகைக்கான (HPIPT) விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

ஷா ஆலம், ஏப் 19: சிலாங்கூர் மாணவர்களுக்கான உயர்கல்வி நிறுவன உதவித்தொகைக்கான (HPIPT) விண்ணப்பத்தின் கால அவகாசம் ஏப்ரல் 16 முதல் 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் போர்ட்டலில் நெரிசலைத் தவிர்க்க, காலக்கெடுவிற்கு முன்னதாக ஆவணங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று சிலாங்கூர்  மந்திரி புசாரின்  அரசியல் செயல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

"உயர்கல்வி நிறுவன உதவித்தொகைக்கான விண்ணப்பம் ஏப்ரல் 30, 2024 வரை நீட்டிக்கப்படும். விண்ணப்பக் காலக்கெடுவிற்கு முன் உங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவும்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

HPIPT திட்டம் RM1,000 ரொக்க ஊக்கத்தொகையை 3,000 நபர்களுக்கு மட்டுமே வழங்குகிறது. https://edanapendidikan.selangor.gov.my என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.

கடந்த ஆண்டு நவம்பரில் 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, இத்திட்டத்தைத் தொடர 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப் பட்டதாகக் டத்தோ மந்திரி புசார் கூறினார்.

சிலாங்கூர் மாநில கல்வி உதவித்தொகை நிதி (TKWBNS) திட்டமும் மாநிலத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக RM9 மில்லியன் ஒதுக்கீட்டில் தொடர்கிறது என அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மொத்தம் 2,500 மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடரும் சுமையைக் குறைக்க அடிப்படைப் பல்கலைக்கழக கட்டண உதவியைப் (பாயு) பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.