ஷா ஆலம், ஏப் 16: ஜென்ஜாரோம், கோலா லங்காட்டில் மொத்தம் 30 பகுதிகளில் இன்று முதல் வியாழன் வரை படிப்படியாக மின்சாரத் தடை ஏற்படும்.
ஜென்ஜாரோம் நகரில் உள்ள பிரதான விநியோக துணை மின்நிலையத்தில் (PPU) திட்டமிடப்பட்ட சீரமைப்பு பணியின் காரணமாக இடைநிறுத்தங்கள் ஏற்படுவதாகத் தெனாகா நேஷனல் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
"ஜெனரேட்டரை நிறுவுதல் மற்றும் அகற்றும் பணிகளால் 15 முதல் 30 நிமிடங்களுக்குத் தற்காலிக மின்சாரம் தடை ஏற்படும்.
“இந்த பணிகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்,” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:
1. தாமான் டேசா
2. கம்போங் பாரு சுங்கை ஜரோம்
3. தாமான் யாயாசான் 5
4. தெலுக் பங்லிமா காராங்
5. ஜாலான் ராஜா பூசு
6. தாமான் மக்மூர்
7. ஜரோமாஸ் 1,4,5 & 6
8. தாமான் கோத்தா
9. எகோன்சேப் ஜரோமாஸ்
10. கம்போங் ஜென்ஜாரம்
11. ஜென்ஜாரம் இடைநிலைப்பள்ளி
12. ஜாலான் லுஹ்ர் 18
13. ஜாலான் அபு மாஸ்மோ
14. எஸ்டிபிஐ ரோமாஸ்
15. தாமான் அமனா 3
16. ஜரோமாஸ் பிராதான ஸ்விட்ச் நிலையம்
17. அங் கென் செங்
18. பிடிதி ஜாலான் சத்ரியா 6 & 58
19. சிஎஸ் கொரோ மாக்ஸ்
20. சின் கிம் ஹின்
21. தெலுக் பங்ளீமா காராங் இண்டாஸ்ரி பார்க் 2
22. சுங்கை ரம்பாய்
23. திம்பர் டாப்
24. நோ பொரோபலம்
25. பியர் மார்க் பொரபெடிஸ்
26. எம்திடி ஜாலான் செகெந்திங்
27. கின் ஐக் ரியாலிட்டி
28. வன்தா அஸ்லி
29. தாமான் பெர்சத்து
30. தாமான் டேசா ஜெரோம் 2
பொதுமக்கள் தங்கள் நீண்டகால வசதிக்காக மின்சார விநியோக இடையூறுகளை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராகுமாறு அழைப்பு விடுக்கிறது.
"இந்த விநியோக இடையூறு மிகக் குறுகிய நேரம் மட்டும் ஏற்படுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தெனாகா நேஷனல் எடுக்கும்," என்று தெரிவிக்கப்பட்டது.
மின் சாதனங்களைக் கையாளும் போது, குறிப்பாக மின் தடை ஏற்படும் சமயம் கவனமாக இருக்குமாறும் பயனர்களுக்குத் தெனாகா நேஷனல் அறிவுறுத்துகிறது.
மேலும் தகவல்களுக்குத் தெனாகா நேஷனல் CareLine ஐ 15454 அல்லது தெனாகா நேஷனல் முகநூல் மற்றும் டுவிட்டர் @Tenaga_Nasional ஐ தொடர்பு கொள்ளவும்.


