SELANGOR

ரூமா காசெக்  ஹர்மோனியில் வசிக்கும் 30 பேர் மீடியா சிலாங்கூருக்கு வருகை

16 ஏப்ரல் 2024, 4:22 AM
ரூமா காசெக்  ஹர்மோனியில் வசிக்கும் 30 பேர் மீடியா சிலாங்கூருக்கு வருகை

ஷா ஆலம், ஏப் 16: நேற்று ரூமா காசெக்  ஹர்மோனி (ஆர்கேஹெச்) பாயா ஜராஸில் வசிக்கும் மொத்தம் 30 பிள்ளைகள் மீடியா சிலாங்கூருக்கு வருகை தந்தனர்.

உத்தாரா மலேசியா பல்கலைக்கழகத்தில் பயிலும் ஐந்தாம் பருவ மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டம் இளைஞர்களுக்கு ஊடக உலகைப் பற்றி அறிமுகப்படுத்துவதே நோக்கமாகக் கொண்டுள்ளது என திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

``செலாங்கா கே இண்டஸ்ட்ரி கிரியேட்டிஃப்`` திட்டம் ஊடக ஆர்வலர்களுடன் சமூக ஒருமைப்பாட்டை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று முகமட் நைம் அபு பக்கர் கூறினார்.

"இந்த திட்டம் ரூமா காசி ஹர்மோனி குழந்தைகளுக்குப் புதிய அனுபவங்களை அளித்தது குறிப்பாக ஊடக உலகைப் பற்றி ஆகும்

"இது அவர்களுக்கு ஆரம்பகாலத் தெளிவைக் கொடுக்கும், குறிப்பாக எஸ்.பி.எம் மாணவர்கள் இந்தத் துறையில் எதிர்காலத்தில் பணிபுரிய சிந்திக்கலாம்" என்று அவர் கூறினார்.

இந்த வருகையின் போது, மீடியா சிலாங்கூர் மூத்த எழுத்தாசிரியர் ஃபாத்தி அரிஸ் ஓமர் மற்றும் சிலாங்கூர் தொலைக்காட்சியின் சிறப்பு ஆலோசகர் இஸ்வான் அசிர் சல்லே ஆகியோர் ஊடக உலகம் பற்றிய அளித்த விளக்கங்களையும் மாணவர்கள் கேட்டறிந்தனர்.

அவர்கள் செய்திகளைப் படிக்கும் செயல்முறையைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டனர் மற்றும் ஒளிபரப்புத் துறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை கண்டனர். மேலும், அவற்றை கையாளுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.