ஷா ஆலம், ஏப் 9: பள்ளி பைகள் மற்றும் எழுது பொருட்களுக்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் மே 3 2024 வரை யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) திறந்துள்ளது.
மாநிலத்தில் வசிக்கும் மக்கள் இந்த உதவித் திட்டங்களில் பங்கேற்க சில கட்டுப்பாடுகள் உண்டு, அவை ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் உட்பட சில குடும்ப மற்றும் கீழ் காணும் தகுதிகளுடன் கீழ் கண்டவாறு விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து 56 சிலாங்கூர் மாநில சட்டமன்றங்கள் DUN) ஒவ்வொன்றிலும் தலா 125 பயனாளிகளுக்கு இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"விண்ணப்பதார்கள் சிலாங்கூர் குழந்தைகள் பாரம்பரிய நிதி (தவாஸ்) திட்டத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களாக இருத்தல் வேண்டும் மற்றும் எம்பிஐ இடமிருந்து 'பேக் டு ஸ்கூல்' உதவியைப் பெறாதவர்களாக இருக்க வேண்டும்.
"மேலும், தாய் அல்லது தந்தை இல்லாத குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தை சிலாங்கூர் வாக்காளர்களாக இருக்க வேண்டும்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
சிலாங்கூரைச் சுற்றியுள்ள தொகுதி அலுவலகங்கள் அல்லது தொகுதி ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை செய்யலாம்.
"தகுதியுள்ள பெறுநர்களுக்கான தகவல் குறுஞ்செய்தி சேவை அமைப்பு (எஸ்எம்எஸ்) மூலம் தெரிவிக்கப்படும்".


