SELANGOR

ராயா உணவைத் தயாரிக்க சிலாங்கூர் தன்னார்வலர்கள் குழுவுடன் மந்திரி புசார் அலுவலகம் இணைந்து வேலை செய்தது

9 ஏப்ரல் 2024, 4:03 AM
ராயா உணவைத் தயாரிக்க சிலாங்கூர் தன்னார்வலர்கள் குழுவுடன் மந்திரி புசார் அலுவலகம் இணைந்து வேலை செய்தது

ஷா ஆலம், ஏப் 9: உள்ளூர் சமூகத்திற்கு விநியோகிப்பதற்காக ராயா உணவைத் தயாரிக்க சிலாங்கூர் தன்னார்வலர்களுடன் மந்திரி புசார் அலுவலகம் ஒன்றாக இணைந்து வேலை செய்தது.

கெம்பக் ராயா திட்டத்தில் சுமார் 70 தன்னார்வலர்கள் லெமாங், டோடோல் மற்றும் கோழி ரெண்டாங் ஆகியவற்றை சமைத்தனர் என சிலாங்கூர் குழுவின் தலைவர் சடினா சுஃபியன் கூறினார்.

"இத்திட்டம் அதிகாலையிலிருந்து தொடங்கியது. ரெண்டாங்கிற்கு நாங்கள் 70 கோழிகளைப் பயன்படுத்தினோம். ஐந்து பானை டோடோல் செமினியைச் சேர்ந்த சிலாங்கூர் குழுவால் பிரத்யேகமாகச் சமைக்கப்பட்டது.

"லெமாங் 300 குச்சிகள் உலு சிலாங்கூரைச் சேர்ந்த சிலாங்கூர் குழுவால் தயாரிக்கப்பட்டன. ஏனெனில் லெமாங் தயாரிப்பதில் அவர்கள் வல்லுநர்கள்" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த நிகழ்ச்சி மந்திரி புசாரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது மற்றும் அனைத்து உணவுகளும் பொதுமக்களுக்கு நேற்று மதியம் விநியோகிக்கப்பட்டன.

மார்ச் 23 அன்று, 5,000 புபோர் லம்புக் பேக்கட்டுகளை நகரைச் சுற்றி மூன்று இடங்களில் எம்பிஐ விநியோகித்தது.

அதாவது, ஜெலாஜா புபோர் லம்புக் 2024 திட்டத்தின் மூலம், சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா பாலிடெக்னிக், சிலாங்கூர் காவல்துறை தலைமையகம் மற்றும் சுல்தான் சலாவுடின் அப்துல் அஜீஸ் ஷா மசூதி ஆகிய இடங்களில் விநியோகம் செய்யப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.