ஷா ஆலம், ஏப் 8: சிலாங்கூர் மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ரம்ஜான் பஜார்களில் பொதுமக்களுக்கு RM10 மதிப்புள்ள மொத்தம் 3,000 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டன என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
``மசோக் பஜார்`` பிரச்சாரத்தின் மூலம் 872 பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் (பிளாட்ஸ்) உதவியது. மேலும் டிஜிட்டல் மயமாக்கல் அம்சத்தை ஊக்குவிக்கிறது என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"இந்த திட்டம் கடந்த ஆண்டு RM 5 மதிப்புள்ள 20,000 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்களை விநியோகிப்பதன் தொடர்ச்சியாகும்.
"இத்திட்டம் சிலாங்கூரில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வணிகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மாற்றியமைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.
வணிகர்களுக்கு உதவுவதுடன், வாடிக்கையாளர்க்கு வழங்கப்படும் கூப்பன்களைச் செலவழிப்பதன் மூலம் இரு சாராருக்கும் நன்மை பயக்கும் என்று அமிருடின் கூறினார்.
பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் மாநகராட்சிகள் மற்றும் காஜாங் நகராண்மை கழகத்துடன் இணைந்து பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்ய எம்பிஐ RM40,000 ஒதுக்கியது.


