SELANGOR

கோம்பாக் செத்தியாவில் 500 பேருக்கு நிதி உதவி

8 ஏப்ரல் 2024, 5:05 AM
கோம்பாக் செத்தியாவில் 500 பேருக்கு நிதி உதவி

ஷா ஆலம், ஏப். 8 - ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோம்பாக் செத்தியாவில் மேலும் 500 சக்காட் பெறுநர்கள் பண உதவியைப் பெற்றுள்ளனர், இது ஏழ்மை நிலையில் உள்ள குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இத்திட்டம் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் மாநில அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று கோம்பாக் எம்.பி.யாகவும் இருக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முகநூல் பதிவில் தெரிவித்தார்.

"நான் நேற்று பெரிங்கின் மண்டபத்தில் தேவைப்படும் மேலும் 500 பேருக்கு ஐடில்பித்ரி நன்கொடைகளை வழங்கினேன்," என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.

"சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாகும் இந்தத் திட்டம் எம்பிஐ மற்றும் லெம்பகா சக்காட் சிலாங்கூர் மூலம் நிர்வகிக்கப்படும்.

"இந்த நன்கொடையானது ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கும், அவர்களின் நலன் புறக்கணிக்கப் படாமல் கவனிப்பதற்கும் மாநில அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது" என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.