SELANGOR

உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்களை அழைத்து வர இலவசப் பேருந்து சேவை

8 ஏப்ரல் 2024, 4:22 AM
உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்களை அழைத்து வர இலவசப் பேருந்து சேவை

ஷா ஆலம், ஏப் 8: ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு பல உள்ளூர் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட சிலாங்கூர் மாணவர்களை அழைத்து வருவதற்காக மாநில அரசாங்கத்தால் மொத்தம் ஐந்து பேருந்துகள் தயார் செய்யப்பட்டன.

சிலாங்கூர் பல்கலைக்கழக மாணவர்கள் ராயாவுக்கு வீடு திரும்புதல் 2024 நிகழ்ச்சியில் மலேசியா அறிவியல் பல்கலைக்கழக, துன் உசைன் ஓன் மலேசியா பல்கலைக்கழகம் மற்றும் டெக்னிகல் மலேசியா மலாக்கா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என டத்தோ மந்திரி புசார் கூறினார்.

திரங்கானுவில் உள்ள சுல்தான் சைனால் அபிடின் பல்கலைக்கழகம் மற்றும் மலேசியா பகாங் பல்கலைக்கழக மாணவர்களும் இந்த திட்டத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுவர் என அவர் தெரிவித்தார்.

"சிலாங்கூர் தேசிய மாணவர் சங்கத்துடன் (பெர்மாஸ்) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டம், மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஐடில்பித்ரியைக் கொண்டாட வீடு திரும்ப உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"இந்த பேருந்து சேவை மாணவர்களைக் கோலாலம்பூரில் உள்ள தெற்கு ஒருங்கிணைந்த முனையத்திற்கும், இங்குள்ள மாநில அரசு (SUK) நிர்வாக கட்டிட சதுக்கத்திற்கும் அழைத்துச் செல்லும்" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

மாணவர்களின் நலனில் அக்கறை கொள்வதில் மாநில நிர்வாகம் எப்போதும் உறுதியுடன் இருப்பதாகவும், இம்முறை நிதிச்சுமையைக் குறைப்பதுடன், அவர்கள் வீடு திரும்புவதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டதாக அமிருடின் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.