SELANGOR

தாமான் வாவாசான், பூச்சோங்கில் கூடுதலாக 49 பார்க்கிங் இடங்கள் ஏற்பாடு

5 ஏப்ரல் 2024, 8:03 AM
தாமான் வாவாசான், பூச்சோங்கில் கூடுதலாக 49 பார்க்கிங் இடங்கள் ஏற்பாடு

சுபாங் ஜெயா, ஏப் 5: தாமான் வாவாசான், பூச்சோங்கில் 49 பார்க்கிங் இடங்கள் கூடுதலாக ஏற்பாடு செய்ததன் மூலம் புக்கிட் வாவாசான் மலை ஏறுபவர்கள் வாகனத்தைச் சீராக நிறுத்த உதவுகிறது. இதனால் நெரிசல் குறைகிறது.

சுபாங் ஜெயா மாநகராட்சி ஏற்பாடு செய்த இத்திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் சுமார் RM160,000 செலவில் முடிக்கப்பட்டது என்று கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் இங் சீ ஹான் விளக்கினார்.

ஆயர் ஹிதம் வனப் பகுதியில் அமைந்துள்ள புக்கிட் வாவாசான், மலை ஏறுபவர் களிடையே பிரபலமானது, குறிப்பாக வார இறுதி நாட்களில், சுமார் 1,000   பேர்  வருகை புரிவர்.

“அதனால் சுற்றுவட்டாரப் பகுதி, குறிப்பாகப் பெர்சியாரான் வாவாசானில் வார இறுதி நாட்களில் சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறாக உள்ளது. அதனால், அதிகமான புகார்கள் வருகின்றன.

மலையேறுபவர்களுக்கு மட்டுமின்றி, சுற்றுவட்டார மக்களுக்கும் பயனளிக்கும் இந்த திட்டத்தை வெற்றியடையச் செய்த எம்பிஎஸ்ஜே நிறுவனத்திற்கு நன்றி, என அப்பகுதியை ஆய்வு செய்த பின்னர் இங் சீ ஹான் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.