SELANGOR

ஶ்ரீ செத்தியா தொகுதியில் 100 நபர்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன

5 ஏப்ரல் 2024, 3:37 AM
ஶ்ரீ செத்தியா தொகுதியில் 100 நபர்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன

பெட்டாலிங் ஜெயா, ஏப் 5: ஶ்ரீ செத்தியா தொகுதியில் மொத்தம் 100 நபர்கள் கிளானா ஜெயா தெங்கு பெட்ரா மசூதியில் நடந்த சஹாயா ரம்ஜான் நிகழ்ச்சியில் உணவு கூடைகள் மற்றும் ராயா பணத்தை நன்கொடையாகப் பெற்றனர்.

யாயாசான் டெலிகாம் மலேசியா சிலாங்கூர் அறக்கட்டளையின் மூலம் RM100 மதிப்புள்ள சமையலறை பொருட்கள் மற்றும் ராயா பணம் (RM150) அடங்கிய உணவு கூடையைச் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி நகா வழங்கினார்.

இந்த நன்கொடை திட்டம் டெலிகாம் பெட்டாலிங் ஜெயாவின் இஸ்லாமிய நல அமைப்பு மற்றும் ஶ்ரீ செத்தியா தொகுதியின் சமூகச் சேவை மையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

"இந்த RM250 மதிப்புதக்க உணவு கூடைகள் ஶ்ரீ செத்தியா தொகுதியில் உள்ள 50 அஸ்னாஃப்கள் மற்றும் 50 ஒற்றை தாய்மார்களுக்கு பயனளிக்கும், `` என்று அவர் நன்கொடை நிகழ்வுக்கு பிறகு கூறினார்.

அதே நிகழ்வில், இந்த ஆண்டு ரம்ஜான் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள 3,000 ஏழை மக்களுக்கு உதவுவதற்காக மொத்தம் RM320,000 செலவிட்டதாக TM ஒழுங்குமுறை மற்றும் தகவல்தொடர்புகளின் துணைத் தலைவர் மியோர் ஷாரில் அனுவர் ரதுஹன் கூறினார்.

"உதவி பெறுபவர்களின் கஷ்டங்களைக் குறைப்பதே எங்களின் குறிக்கோள்,` என்று அவர் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.