ஷா ஆலம், ஏப் 5: ஐந்து நாட்கள் நடைபெறும் எஹ்சான் ஐடில்பித்ரி மெகா விற்பனைத்
திட்டம் மூலம் 250,000 குடும்பங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக
விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
கோழி, இறைச்சி, முட்டை, சமையல் எண்ணெய் மற்றும் அரிசி ஆகிய ஐந்து முக்கியப்
பொருட்கள் RM296,439 ஒதுக்கீட்டில் மானிய விலையில் விற்கப்படும் என்று இஸ்ஹாம்
ஹாஷிம் கூறினார்.
மொத்தம் 50,000 பேர் வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 250,000
குடும்பங்களுக்குப் பயனளிக்கும். கூடுதலாக, இத்திட்டத்தில் 250 தொழில்முனைவோர்
பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு குறைந்த வருமானம் கொண்டவர்கள் ராயா உபகரணங்களை வாங்க
உதவும் வகையில் 18 இடங்களில் மெகா விற்பனைக்கு ஏற்பாடு செய்தோம், என்று அவர்
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இறைச்சி (6,100 கிலோ), உறைந்த இறைச்சி (2,000 கிலோ), முட்டை (9,400 பலகை),
எண்ணெய் (3,976 பாட்டில்கள்) மற்றும் அரிசி (7,600 பேக்கட்) ஆகியவற்றுடன் சேர்த்து
மொத்தம் 14,800 கோழிகள் விற்கப்படுவதாக இஷாம் கூறினார்.
இங்கு கோழி RM10, புதிய இறைச்சி (RM35/கிலோ), உறைந்த இறைச்சி (RM10/கிலோ),
முட்டை (RM10/பலகை), சமையல் எண்ணெய் (RM35/ஐந்து கிலோ) மற்றும் அரிசி
(RM13/ஐந்து கிலோ),``என விற்கப்படும்.
கடந்த ஆண்டு, மாநிலம் முழுவதும் 23 இடங்களில் ஆறு நாட்களுக்கு இதே விற்பனையை
மாநில அரசு ஏற்பாடு செய்தது.
இங்கு சந்தையை விட 30 சதவீதம் விலை குறைவு.


