SELANGOR

மாட்டா-  சிலாங்கூர் பெவிலியன் மூன்று நாட்களில் RM494,362 விற்பனை

3 ஏப்ரல் 2024, 8:25 AM
மாட்டா-  சிலாங்கூர் பெவிலியன் மூன்று நாட்களில் RM494,362 விற்பனை

ஷா ஆலம், ஏப் 3: கடந்த மார்ச் மாதம் மாட்டா  எனப்படும் சுற்றுப்பயண ஏற்பாடு நிறுவன  கண்காட்சியில் பங்கேற்ற சிலாங்கூர் பெவிலியன் மூன்று நாட்களில் RM494,362 விற்பனையை பதிவு செய்ததாக கூறியது.

இக்கண்காட்சியில் "நாம் கிராமத்திற்குத் திரும்புவோம்" என்ற கருப்பொருளில் 17 சுற்றுலா நிறுவனங்கள் பங்கேற்றன என சிலாங்கூர் சுற்றுலா தெரிவித்தது. அவை மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை, குறிப்பாக வடக்கில் உள்ளவற்றை அடையாளம் காட்டின.

ஸ்கை மிரர், ஃபார்ம் இன் தி சிட்டி மற்றும் ஜங்கிள் ஸ்கூல் கோம்பாக் ஆகியவை அதிக விற்பனை பங்களிப்பை வழங்கியது. இது செமலாய் பழங்குடியினரின் மாங்குவாங் தயாரிப்புகள் மற்றும் காட்டின் வாழ்க்கைத் திறன்களை வெளிப்படுத்தியது.

மேலும், 2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டை முன்னிட்டு 7 மில்லியன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை, 'விடுமுறைக்குச் செல்ல விரும்புகிறீர்களா? சிலாங்கூரை முதலில் சுற்றி பாருங்கள்!' மற்றும் ‘Splendid Selangor, Take Me Anywhere!’ கருப்பொருளுடன் சிலாங்கூர் சுற்றுப்பயணத்தை ஊக்குவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.