SELANGOR

சிலாங்கூரில் கோவிட் -19 சம்பவங்களின் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது

3 ஏப்ரல் 2024, 2:37 AM
சிலாங்கூரில் கோவிட் -19 சம்பவங்களின் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது

ஷா ஆலம், ஏப் 3: சிலாங்கூரில் கோவிட் -19 சம்பவங்களின் நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்று பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பண்டிகை காலங்களில் சமூகம் எப்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜமாலியா ஜமாலுடின் கேட்டுக் கொண்டார்.

"விடுமுறை அல்லது பண்டிகை காலங்களில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை சிறிது அதிகரிப்பதாக கண்டறியப்படுகிறது.  இது ஒரு வழக்கமான பாணியாக இருப்பினும்,  நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காண்கிறோம்," என்று அவர் கூறினார்.

அந்த அச்சுருத்தகளிலிருந்து விடுப்பட, பொதுமக்களை குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் சுகாதார பாதுகாப்பை  அனுசரிக்கும் படி  ஜமாலியா ஊக்குவித்தார்.

"கோவிட்-19 பாதிப்பு இன்னும் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவரி அணியுமாறு அறிவுறுத்தப் படுகிறீர்கள்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.