SELANGOR

இரண்டு வாரங்களில் 6,083 கிலோ உபரி உணவு சேகரிப்பு

2 ஏப்ரல் 2024, 7:28 AM
இரண்டு வாரங்களில் 6,083 கிலோ உபரி உணவு சேகரிப்பு

ஷா ஆலம், ஏப் 2: மைசேவ் ஃபுட்@பஜார் ரம்ஜான் திட்டத்தின் இரண்டு வாரங்களில் 6,083 கிலோ உபரி உணவை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) சேகரித்தது.

இத்திட்டத்திற்கு வணிகர்களின் ஆதரவு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. இதனால் உணவு வீணடிக்கப்படுவதைத் தவிர்க்கலாம் என மேயர் செரமி தர்மன் கூறினார்.

"இந்த திட்டத்தில்  அடுத்த ஆண்டு அதிக ரம்ஜான் பஜார்களைச் சேர்ப்பதன் மூலம் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நாங்கள் முன்மொழிகிறோம். இவ்வாண்டு இத்திட்டத்தில் மூன்று ரம்ஜான் பஜார்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டன.

"இத்திட்டம் நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில் தேவைப்படுபவர்களுக்கு உணவை வழங்கி உதவ முடிந்தது," என்று அவர் கூறினார்.

இன்று பெட்ரோனாஸ் எரிபொருள் நிலையம், செக்‌ஷன் 7இல் நடைபெற்ற ‘ஜோம் ஈசி மின்யாக் மோட்டார் சைக்கிள்‘ நிகழ்ச்சிக்குப் பின்னர் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.