SELANGOR

மொத்தமாகக் குப்பை சேகரிக்கும் சேவையைச் செலாயாங் நகராண்மை கழகம் வழங்குகிறது

2 ஏப்ரல் 2024, 7:26 AM
மொத்தமாகக் குப்பை சேகரிக்கும் சேவையைச் செலாயாங் நகராண்மை கழகம் வழங்குகிறது

ஷா ஆலம், ஏப் 2: ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு மொத்தமாகக் குப்பை சேகரிக்கும் சேவையை நேற்று தொடங்கி ஏப்ரல் 7 வரை செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) வழங்குகிறது.

மின்சார மற்றும் மின்னணு கழிவுகள் (இ-கழிவுகள்) மற்றும் தளவாட பொருட்களை மக்கள் எளிதாக அகற்ற உதவுவதற்காக KDEB கழிவு மேலாண்மை உடன் இணைந்து 'ஸ்பிரிங் கிளீனிங்' திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் சோஃபாக்கள் மற்றும் படுக்கைகள், மின் மற்றும் மின்னணு கழிவுகள் (இ-கழிவுகள்), மறுசுழற்சி கழிவுகள் ஆகியவற்றை அகற்றலாம்.உணவுக் கழிவுகள், மரக்கழிவுகள் மற்றும் கட்டுமானக் கழிவுகள் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

"இத்திட்டத்தில் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

"சேகரிப்பு நேரத்தை முன்பதிவு செய்ய, திடக்கழிவு மற்றும் சுகாதார மேலாண்மைத் துறையை (JPSPK) 03-6126 6080 என்ற எண்ணில் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.