SELANGOR

ஊடகப் பயிற்சியாளர்களுடன் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் கலந்து கொண்டார்

2 ஏப்ரல் 2024, 4:16 AM
ஊடகப் பயிற்சியாளர்களுடன் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் கலந்து கொண்டார்

ஷா ஆலம், ஏப் 2: சன்டாட்@தெராபுங் உணவகத்தில் பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினருடன் இணைந்து மொத்தம் 30 ஊடக பயிற்சியாளர்கள் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வானது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான நட்பை வலுப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

"வாய்ப்பிருந்தால், இந்த நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் அனைத்து ஊடகங்களையும் கொண்டாடும் ஒரு வருடாந்திர நிகழ்வாக அல்லது பாரம்பரியமாக மாற்ற திட்டமிட்டுள்ளேன்.

"நாங்கள் செயல்படுத்தும் அனைத்து முயற்சிகளும் பொதுமக்களுக்கு அறிவிக்கப் படுவதை உறுதிசெய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்," என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மீடியா சிலாங்கூர், ரேடியோ டெலிவிஷன் மலேசியா, பெரித்தா ஹரியான், உத்துசான், சினார் ஹரியான், மலேசியாகினி மற்றும் பெர்னாமா ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த மீடியா பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.