ஷா ஆலம், ஏப் 2- நாம் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிப்பதில்
ஊடகங்கள் மற்றும் சிலாங்கூர் மாநில அரசு நிறுவனங்களுக்கிடையே
அணுக்கமான ஒத்துழைப்புத் தேவை என்று மந்திரி புசார்
வலியுறுத்தியுள்ளார்.
அரசின் நடவடிக்கைகள் மற்றும் அக்கறையின் சட்டப்பூர்வ நியாயத்
தன்மை குறித்து குறிப்பாக அரசாங்கம் இவற்றை தனக்குச் சாதமாக
பயன்படுத்திக் கொள்கிறதா என்று பொது மக்கள் தொடர்ச்சியாக எழுப்பும்
கேள்விகளால் இத்தகைய சவால்கள் எழுகின்றன என்று டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
இத்தகைய சவால்கள் ஊடகங்கள், அரசு சார்பு நிறுவனங்கள் (ஜி.எல்.சி.)
மற்றும் அரசு துறைகளுக்கு மனநிறைவைத் தருவதாக இல்லை என்றும்
அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய சவால்களைச் சமாளிப்பதற்கு நாம் மனோரீதியில் தயாராக
வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார். நேற்றிரவு இங்குள்ள தனது
அதிகாரத்துவ இல்லத்தில் ஊடகங்கள் மற்றும் அரசுத் துறைகளின்
பிரதிநிதிகளுடன் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசுத் துறைகள் முதலாவது சிலாங்கூர் திட்டத்தை அமல் செய்வதில்
கூடுதல் சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சுமார் 400
வருகையாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் கூறினார்.
மாநிலத்தின் பொருளாதாரத்தை உந்தச் செய்யும் முயற்சியின் போது
ஏற்படக்கூடிய இத்தகைய சவால்களை மாநிலத்திலுள்ள அரசுத் துறைகள்
தொடர்ந்து கடந்த வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய அணுகுமுறை 1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளைப் போல்
அல்ல என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.


