ஷா ஆலம், ஏப் 2: ஏப்ரல் 6 மற்றும் 27 ஆம் தேதிகளில் சமையல் எண்ணெய், உடைகள் மற்றும் பயன்படுத்திய பொருட்களை பணமாக மாற்றுவதற்கான பிரச்சாரத்தை கோலா லங்காட் நகராண்மை கழகம் (எம்பிகேஎல்) ஏற்பாடு செய்துள்ளது.
பந்திங் பொதுச் சந்தையில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்குமாறு உள்ளூர் அதிகாரசபை (பிபிடி) தெரிவித்துள்ளது.
"குறிப்பிட்ட தேதியில் பொருட்களை மற்றும் பயன்படுத்திய சமையல் எண்ணெயைப் அனுப்பும் நபர்கள் கோலா லங்காட் நகராண்மை கழகத்திடமிருந்து பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குறைந்தபட்சம் ஐந்து கிலோ சமையல் எண்ணெய் கொண்டு வரும் நபர்களுக்கு 20 லிட்டர் பீப்பாய் இலவசமாக வழங்கப்படும்," என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
நாளிதழ்கள், பத்திரிக்கைகள், காகிதங்கள், கேன்கள், பிளாஸ்டிக், டெட்ராபேக்குகள், இரும்பு, தொலைக்காட்சிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் ஆகியவை அன்றைய தினம் கொண்டு வரக்கூடிய பொருட்களில் அடங்கும்.
ஏதேனும் கேள்விகள் அல்லது கூடுதல் தகவல்களுக்கு, 012-300 4847 என்ற எண்ணில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறையைத் தொடர்பு கொள்ளவும்.


