ஷா ஆலம், ஏப் 1: எதிர்வரும் ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிகமான
குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் பண்டான் இண்டா தொகுதியில் உணவு
கூடைகள் வழங்கப்படும்.
இத்தொகுதியில் 200 ரிங்கிட் மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களை 750
பெறுநர்களுக்கு மட்டுமே விநியோகித்ததைத் தொடர்ந்து இந்த திட்டம்
மேற்கொள்ளப்பட்டதாகச் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.
இன்று முதல் நாளை வரை https://forms.gle/MwQNV4dHui8eebEc6 என்ற இணைப்பில்
விண்ணப்பங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது”.
எனவே, இந்த ரம்ஜான் காலத்தில் எந்த உதவியும் கிடைக்காதவர்களுக்காக ஐதில்பித்ரி
உணவு கூடை உதவிக்கான விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது என மூகநூல் மூலம்
தெரிவிக்கப்பட்டது.
நேற்று ஜெயண்ட் சூப்பர் மார்க்கெட், பண்டான் கபிட்டலில் நடந்த விழாவில் 750
பெறுநர்களுக்கு ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களை இஷாம்
வழங்கினார்.
இந்த ஆண்டு மாநில அரசு ஹரி ராயாவை முன்னிட்டு 7.510 மில்லியன் ஒதுக்கீட்டில்
37,550 வவுச்சர்களை வழங்கியது.


