SELANGOR

தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம் 2.8 டன் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் சேகரிப்பு

1 ஏப்ரல் 2024, 9:42 AM
தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம் 2.8 டன் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்  சேகரிப்பு

ஷா ஆலம், ஏப் 1: கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹரி ராயாயை முன்னிட்டு தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம் 2.8 டன் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) சேகரித்தது.

இந்த திட்டம் ஒரே நேரத்தில் 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும்

தற்போதைய விலைக்கு ஏற்ப மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பணமாக மாற்றும்

வாய்ப்பை வழங்கியது என உள்ளூர் அதிகாரசபை தெரிவித்தது.

"இந்த திட்டம் உள்ளூர்வாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள மறுசுழற்சி செய்யக்கூடிய

பொருட்களை அப்புறப்படுத்த உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மறுசுழற்சி செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளும் தற்போதுள்ள விலையைப் பொறுத்து

பணமாக மாற்றப்படுகிறது என்று முகநூலில் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இத்திட்டம் மூலம் வீசப்படும் துணிகள் (827 கிலோ), எலெக்ட்ரிக்கல் மற்றும்

எலக்ட்ரானிக் கழிவுகள் (780.3 கிலோ), பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் (388.5

கிலோ) மற்றும் பிளாஸ்டிக், அலுமினியம் மற்றும் காகிதம் (827 கிலோ) ஆகியவை

சேகரிக்கப்பட்டன.

உள்ளூர்வாசிகள் மற்றும் சமூகங்களை மறுசுழற்சி செய்வதைத் தொடர

ஊக்குவிப்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பண்டிகைக்

காலங்களில் வீட்டுக் கழிவுகள் குறையும் என எம்பிஏஜே தெரிவித்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.