SELANGOR

அதிக பரிவர்த்தனையுடன் ரொக்கமற்ற வணிகபதிவை செய்த தொழில்முனைவோருக்கு ஊக்க த்தொகை

1 ஏப்ரல் 2024, 9:40 AM
அதிக பரிவர்த்தனையுடன் ரொக்கமற்ற வணிகபதிவை  செய்த தொழில்முனைவோருக்கு ஊக்க த்தொகை

ஷா ஆலம், ஏப் 1: அதிக ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் உயர்ந்த விற்பனையை பதிவு செய்த ஆறு தாமான் மெலாவத்தி ரம்ஜான் பஜார் தொழில்முனைவோருக்கு மே பேங்க் RM500 வரை ஊக்கத்தொகையை வழங்கியது.

அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்துடன் இணைந்து வழங்கப்படும் சலுகை,  விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறைந்தபட்சம் RM10 வாங்கும் பயனீட்டாளர்களுக்கு RM2 தள்ளுபடி வழங்குகிறது.

"இந்த ஆண்டு, எம்பிஏஜே மே பேங்க் மற்றும் எஃப்ஜிவி ஹோல்டிங்ஸ் ஆகியற்றுடன் இணைந்து அம்பாங் ஜெயாவை 2025 ஆம் ஆண்டுக்குள் வாழத் தகுதியான டிஜிட்டல் நகரமாக மாற்ற பணமில்லா ரம்ஜான் பஜார் சந்தை வெற்றிகரமாக்கியது.

அதே நேரத்தில், வர்த்தகர்களுக்குக் கூடாரங்கள், ஏப்ரன்கள் வழங்குவதாகவும் சமையல் எண்ணெய், கிரீமர், தேங்காய் பால் மற்றும் வெண்ணெய் போன்றவை தள்ளுப்படி விலையில் தருவதாகவும் எம்பிஏஜே கூறியது.

அம்பாங் ஜெயா உரிமம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை, 16 நிர்வாக இடங்களில் 835 தற்காலிக ரம்ஜான் பஜார் உரிமங்களுக்கு ஒப்புதல் அளித்தது, இதில் தாமான் மெலாவத்தில் உள்ள 128 கடைகளும் அடங்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.