SELANGOR

மைசேவ் ஃபுட்@பஜார் ரம்ஜான் திட்டத்தில் 54.78 கிலோகிராம் உபரி உணவு சேகரிப்பு

1 ஏப்ரல் 2024, 6:11 AM
மைசேவ் ஃபுட்@பஜார் ரம்ஜான் திட்டத்தில் 54.78 கிலோகிராம் உபரி உணவு சேகரிப்பு

ஷா ஆலம், ஏப்ரல் 1: மைசேவ் ஃபுட்@பஜார் ரம்ஜான் திட்டத்தின் மூலம் இரண்டு நாட்களில் மொத்தம் 54.78 கிலோகிராம் உபரி உணவு சேகரிக்கப்  பட்டது.

இத்திட்டத்தின் மூலம் சேகரிக்கப் பட்ட உபரி உணவு கோலா சிலாங்கூர் ஜமேக் சுல்தான் இப்ராஹிம் மசூதியின் நிர்வாகத்திற்கு விநியோகிக்கப் பட்டது என்று கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

"இத்திட்டம் உணவு வீணாக்கப் படுவதைத் தவிர்ப்பதற்கும், குப்பைகளை குறைப்பதற்கும் மேற்கொள்ளப் பட்டுள்ளது," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மூன்று இடங்களுக்கு இத்திட்டத்தைக் கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் தொடரும். அதாவது லோட்டஸ் மார்க்கெட் முன், கோலா சிலாங்கூர் (ஏப்ரல் 1 மற்றும் 8), தஞ்சோங் காராங் ரம்ஜான் பஜார் (ஏப்ரல் 3) மற்றும் IADA ரம்ஜான் பஜார் (ஏப்ரல் 5) ஆகியவை ஆகும்.

"எனவே, விற்கப்படாத உணவை தேவைப்படுபவர்கள் மற்றும் நலன்புரி இடங்களுக்கு விநியோகிக்க வணிகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்,".

புக்கிட் மெலாவதி DNS ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆதரவுடன் சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் (STDC) மற்றும் இன்ட்ரா கோலா சிலாங்கூர் கல்லூரியின் தன்னார்வலர்களும் இந்த திட்டத்திற்கு உதவினார்கள்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் 03-3289 1439 என்ற எண்ணில் அஃப்தால் இஸ்மாயில் அல்லது ஷுஹாடா அபு பக்கரைத் தொடர்பு கொள்ளலாம்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.