SELANGOR

ஐடில்பித்ரியை முன்னிட்டு மெகா மலிவு விற்பனை

29 மார்ச் 2024, 3:47 AM
ஐடில்பித்ரியை முன்னிட்டு மெகா மலிவு விற்பனை

ஷா ஆலம், மார்ச் 29: ஐடில்பித்ரியை முன்னிட்டு பொதுமக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் அத்தியாவசிய பொருட்களை எளிதாக வாங்கும் வகையில் மெகா மலிவு விற்பனை அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த விற்பனை காலை 8 மணிக்குத் தொடங்கும் என தெரிவிக்கப் பட்டது.

மார்ச் 6 ஆம் தேதி நூருல் ஹிடாயா மசூதி, கம்போங் பண்டான் டாலாம் மற்றும் பெக்கான் சபாக் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் விற்பனை நடைபெறவுள்ளது என சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.

இந்த மெகா விற்பனை மார்ச் 7 அன்று சியான்தான் வணிக அரங்கம், செலாயாங் முத்தியாரா மற்றும் பத்து லாவூட் கடற்கரை அரங்கத்தில் தொடரும் என சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முகமட் கைரில் முகமட் ராஸியின் கூறினார்.

"ஜுவாலான் ஏஹ்சான் ரஹ்மா அறிமுகம் படுத்தப்பட்டதிலிருந்து இந்த மெகா விற்பனையானது பண்டிகை காலத்திற்கு முன் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு திட்டமாகும். இது சந்தையுடன் ஒப்பிடும்போது மலிவு விலையில் மக்கள் ராய தேவைகளைப் பெறுவதை உறுதிசெய்யும்.

"நாங்கள் இந்த பண்டிகைக் காலத்தில் தேவைப்படும் வேறு சில பொருட்களையும் விற்பனை செய்வோம், ஆனால் அவை எதிர்காலத்தில் இறுதி செய்யப்படும்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

கடந்த வாரம், ஹரி ராயா ஐடில்பித்ரியை முன்னிட்டு முஸ்லிம் மக்கள் தயாராகும் வகையில் பல இடங்களில் சிறப்பு மலிவு விற்பனை நடைபெறும் என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

கடந்த ஆண்டு, மாநிலம் முழுவதும் 23 இடங்களில் ஐடில்பித்ரியின் போது ஆறு நாள் மெகா விற்பனையை மாநில அரசு ஏற்பாடு செய்தது. இதன் விலை சந்தையை விட 30 சதவீதம் குறைவு ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.