சைபர் ஜெயா, மார்ச் 26 - இந்த ஆண்டு ரம்ஜான் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சிலாங்கூரில் உள்ள ஏழு ஊராட்சி மன்றங்களில் நடந்த 10,854 ரம்ஜான் பஜார்களில் 73 மெட்ரிக் டன்கள் அதிகப்படியான உணவுக் கழிவுகளை சேகரித்துள்ளதாகக் கழிவு மேலாண்மை நிறுவனம் (KDEBWM) தெரிவித்துள்ளது. .
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, உணவுக் கழிவுகள் அளவு குறையவில்லை என்று KDEBWM நிர்வாக இயக்குநர் டத்தோ ராம்லி முகமட் தாஹிர் கூறினார்.
“ரம்ஜான் பஜார்களில் இன்னும் உணவுப் பொருட்கள் கொட்டப்படுவதை நாங்கள் (KDEBWM) கண்டறிந்தோம். 2023 ஆம் ஆண்டில், ரம்ஜான் பஜார்களிலிருந்து 73.67 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப் பட்டதாகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமைப்பதற்கு முன் சாத்தியமான விற்பனையை மதிப்பிடுமாறு அனைத்து பஜார் வர்த்தகர்களுக்கும் ராம்லி அறிவுறுத்தினார்.
"எனவே MySaves Food திட்டத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன், தேவைப்படுபவர்களுக்கு உணவை வழங்குவதன் மூலம் அவை வீணடிக்கப் படுவது தடுக்கப்படுகிறது," என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.


