SELANGOR

ரம்ஜானை முன்னிட்டு  100 ஏழை குடும்பங்களுக்கு உதவி 

26 மார்ச் 2024, 3:40 AM
ரம்ஜானை முன்னிட்டு  100 ஏழை குடும்பங்களுக்கு உதவி 

ஷா ஆலம், மார்ச் 26: நேற்று கான்கார்ட் ஹோட்டல் ஷா ஆலமில் நான்கு தொகுதிகளைச் சேர்ந்த 100 ஏழ்மை குடும்பங்களுக்காக ரம்ஜானை முன்னிட்டு ஜாலினன் உகுவா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நோன்பு துறப்பு விழா மாநில அரசு தலைவர்கள், குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களை தொடர்ந்து அணுகுவதற்கான ஒரு தளமாகும் என வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு கூறினார்.

"இணக்கமான உறவுகளின் வலையமைப்பை உருவாக்குவதற்கும், இந்த மாநிலத்தின் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், மாநில அரசுத் தலைவர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதற்காக வும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

"இந்த உதவி, இக்குழு மீதான மாநில அரசின் தொடர்ச்சியான அக்கறையை நிரூபிக்கிறது மற்றும் அவர்களின் சுமையைக் குறைக்க உதவும் நம் அனைவரின் நேர்மையான நோக்கத்தை வெளிக்காட்டுகிறது" என  நிகழ்ச்சியின் போது  சந்தித்திப்பில் கூறினார்.

சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான நிலைக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியானது கோத்தா கெமுனிங், பத்து தீகா, கோத்தா அங்கேரிக், சுங்கை கண்டிஸ் தொகுதிகள் மற்றும் கிளாப் கெபாஜிக்கான் SUK சிலாங்கூர் ஆகிய இடங்களிலிருந்து உதவி தேவைப்படுபவர்களை ஒன்றிணைக்கிறது.

பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷித் ஹரோனுடன் சேர்ந்து பாப்பாராய்டு ஐடில்பித்ரிக்குத் தயாராகும் வகையில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்கொடைகளை வழங்கினார்.

அடுத்த மாதம் கொண்டாடவிருக்கும் ஐடில்பித்ரியை முன்னிட்டு தொகுதிகளில் 200 ரிங்கிட் மதிப்பில் மொத்தம் 37,550 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் விநியோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சிலாங்கூரில் உள்ள 56 தொகுதிகளில் தேவைப்படும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களை இலக்காகக் கொண்ட இத்திட்டம் RM7.510 மில்லியன் ஒதுக்கீட்டை உள்ளடக்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.