SELANGOR

ரம்ஜான் பஜார் அனுமதி பெறாமல் வணிகம் செய்யும் 'ராம்போ' வியாபாரிகள் மீது நடவடிக்கை

25 மார்ச் 2024, 5:05 AM
ரம்ஜான் பஜார் அனுமதி பெறாமல் வணிகம் செய்யும் 'ராம்போ' வியாபாரிகள் மீது நடவடிக்கை

ஷா ஆலம், மார்ச் 25: உள்ளாட்சி ஆணையத்தின் (பிபிடி) ரம்ஜான் பஜார் அனுமதி பெறாமல் வணிகம் செய்யும் 'ராம்போ' வியாபாரிகளின் இருப்பிடத்தை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.

தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தைப்  பிபிடி மேற்கொள்வதால் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாக தொழில் முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

"அவர்கள் விற்கும் பொருட்கள் ரம்ஜான் பஜார் வர்த்தகர்களைப் போலவே உள்ளன (இந்த விஷயம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பிபிடியால் தீர்மானிக்கப்பட்டது).

"பொதுவாக, இந்த 'ராம்போ' வியாபாரிகள் அனுமதியின்றி திடீரென வந்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், ஏற்கனவே உள்ளாட்சியில் பதிவு செய்து, அனுமதி பெற்ற வியாபாரிகளிடம் பிரச்சனை ஏற்படுகிறது,'' என்றார்.

ரம்ஜான் மாதத்தில் தொழில் முனைவோர் வணிகம் செய்வதை மாநில அரசு தடுக்கவில்லை, ஆனால் விதிகளைப் பின்பற்றும் வணிகர்களுக்கு இது நியாயமற்றது என்றும் நஜ்வான் மேலும் கூறினார்.

பிபிடியும் வந்த புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து, 'ராம்போ' வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதோடு அவர்களை அவ்விடத்தை விட்டு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.