SELANGOR

RM50,000-க்கும் அதிகமான ஒதுக்கீட்டை ஶ்ரீ கெராமட் இடைநிலைப்பள்ளி (செமாட்) பெற்றது

25 மார்ச் 2024, 3:27 AM
RM50,000-க்கும் அதிகமான ஒதுக்கீட்டை ஶ்ரீ கெராமட் இடைநிலைப்பள்ளி (செமாட்) பெற்றது

ஷா ஆலம், மார்ச் 25: மாணவர்களின் வசதிக்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் RM50,000-க்கும் அதிகமான ஒதுக்கீட்டை ஶ்ரீ கெராமட் இடைநிலைப்பள்ளி (செமாட்) பெற்றது.

இந்த உதவிகளில் மத்திய அரசு RM15,000 மற்றும் மாநில அரசு RM15,000 வழங்கியதாக அப்பள்ளியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கூறினார்.

"பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடமிருந்து மார்ச் தொடக்கத்தில் ஆலோசனை அறையை பழுதுபார்க்க நன்கொடை பெறப்பட்டது. அதே நேரத்தில் கட்டிடத்தின் கட்டமைப்பிற்குக் கடந்த ஆண்டு இறுதியில் டத்தோ மந்திரி புசார் உதவி வழங்கினார்.

"கடந்த ஆண்டு முழுவதும், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு பங்களிப்புகளை வழங்கினார். கடந்த வாரம், சங்கத்தின் பணிக்காகப் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கம்  RM1,000 நிதியைப் பெற்றது" என்று டத்தோ சைனோல் அபிடின் முகமட் கூறினார்.

பள்ளியில் சாயம் பூசுவதற்கும் மற்றும் பள்ளியைப் பிரகாசமாக்குவதற்கும் பழைய மாணவர் சங்கத்திடமிருந்து 20,000 ரிங்கிட் நன்கொடையும் பெற்றதாக முதல்வர் நோரெய்னி இப்ராஹிம் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.