SELANGOR

மாநில நிர்வாகம் கல்வித் துறைக்கு முன்னுரிமை அளிக்கிறது

18 மார்ச் 2024, 4:59 AM
மாநில நிர்வாகம் கல்வித் துறைக்கு முன்னுரிமை அளிக்கிறது

ஷா ஆலம், மார்ச் 18: கல்வித் துறையானது மாநில நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் காரணம் அத்துறை வளர்ச்சி மற்றும் பொருளாதார உந்துதலில் ஒரு முக்கிய மையமாக உள்ளது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"பொருளாதார மேம்பாடு என்பது முதலீட்டாளர்களை ஈர்ப்பது, தீவிரமான செயல்பாடுகளை மேற்கொள்வது மட்டுமல்ல, கல்வியையும் உள்ளடக்கியுள்ளது, ஏனெனில் முதலீட்டாளர்கள் சிறந்த பணியாளர்களை விரும்புகிறார்கள்.

"அதைத் தொடர்ந்து, நிர்வாகத்தில் கல்வி முக்கியமானது. இது சமூகத்தின் நல்லிணக்கத்திற்கு  பிள்ளைகள் அறிவு மேம்பாட்டிற்குச் சமூக வளர்ச்சிக்கு  இட்டுச் செல்வதாகும்  " என்று அவர் கூறினார்.

நேற்று பிற்பகல் டேவான் ராஜா மூட மூசா, செக்‌ஷன் 7 இல் கல்வியாளர்கள் சமூகத்துடன் நோன்பு துறக்கும் விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த ஆண்டு, சிலாங்கூர் கல்வி மேம்பாடு மற்றும் சிலாங்கூர் மாநில உதவித்தொகை நிதி மற்றும் மாற்றியமைக்கும் கடன்கள் போன்ற மாணவர்களைத் தயார்படுத்தும் உதவிகளுக்காக கிட்டத்தட்ட RM100 மில்லியனை ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 31 ஜூலை 2023 அன்று தொடங்கப்பட்ட ``கித்தா சிலாங்கூர்`` சலுகையில், RM200 ``Buku Kita Selangor`` வவுச்சர்கள் மற்றும் 10,000 இளைஞர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி உள்ளிட்ட கல்விச் சலுகைகளும் அடங்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.