SELANGOR

ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு இலவச மொத்த குப்பை சேகரிப்பு சேவை

18 மார்ச் 2024, 4:04 AM
ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு இலவச மொத்த குப்பை சேகரிப்பு சேவை

ஷா ஆலம், மார்ச் 16: தரை வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதிகளுக்கு ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு இலவச மொத்த குப்பை சேகரிப்பு சேவையை சுபாங் ஜெயா மாநகராட்சி வழங்குகிறது.

மார்ச் 25 முதல் ஏப்ரல் 5 வரை 12 நாட்களுக்கு KDEB Waste Management Sdn Bhd (KDEBWM) மூலம் சேகரிப்பு சேவை செயல்படுத்தப்படும் என மாநகர மன்றம்  தெரிவித்துள்ளது.

" பழைய தளவாடப் பொருட்கள், மெத்தைகள், போன்ற  உபயோகமற்ற பொருட்கள் சேகரிப்படும். ஆனால், மின்சார பொருட்கள் மற்றும் மறுசுழற்சிக்கான பொருட்களுக்கு  இந்த சேவை  கிடையாது என தெரிவித்துள்ளது.

"இந்த சேவையின் முன்னுரிமை ஐடில்பித்ரியை  கொண்டாடும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது," என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

இச்சேவைக்கான கோரிக்கையை 03-8081 4437 (KDEBWM) அல்லது புலனம் (011-3558 4437) மூலம் தெரிவிக்கலாம்.

"சேகரிப்பு தேதியை நிர்ணயிக்க KDEBWM மூலம் தொடர்பு கொள்ளப்படுவர். மேலும், சேகரிக்கப்படும் மொத்த குப்பைகளை பொதுமக்கள் வீட்டின் முன் வைக்க வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.