SELANGOR

தாமான் மேடான் தொகுதியில் உதவி தேவைப்படும் 200 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் விநியோகம்

15 மார்ச் 2024, 8:18 AM
தாமான் மேடான் தொகுதியில் உதவி தேவைப்படும் 200 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 15 - தாமான் மேடான் தொகுதியைச் சேர்ந்த வசதி

குறைந்த 200 குடும்பங்களுக்கு மந்திரி புசார் கழகத்தின் (எம்.பி.ஐ.)

ஏற்பாட்டில் உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.

நோன்பு மாதத்தை முன்னிட்டு இந்த உணவுக் கூடைகள்

வழங்கப்பட்டதாகக் கூறிய தாமான் மேடான் தொகுதி ஒருங்கிணைப்பாளர்

ஹலிமி அபு பாக்கார், இந்த உதவிப் பொருள்கள் அவர்களுக்கு கட்டங்

கட்டமாக விநியோகிக்கப்பட்டன என்றார்.

இந்த உதவிப் பொருள் விண்ணப்பத்திற்கு அங்கீகாரம் வழங்கிய

எம்.பி.ஐ.க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உதவி சம்பந்தப்பட்ட

குடும்பங்களுக்கு பயன்தரும் வகையில் அமையும் என்று நம்புகிறோம் என

அவர் சொன்னார்.

நோன்புப் பெருநாளின் போது வசதி குறைந்த குடும்பங்கள் எதிர்நோக்கும்

சிரமங்களை குறைக்கும் நோக்கில் இவ்வாண்டு உணவுக் கூடைத்

திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார்

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மார்ச் 9ஆம் தேதி கூறியிருந்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.