SELANGOR

எஹ்சான் ரஹ்மா விற்பனை (ஜேஇஆர்) ரம்ஜானை முன்னிட்டு இன்று நடைபெறாது

12 மார்ச் 2024, 1:29 AM
எஹ்சான் ரஹ்மா விற்பனை (ஜேஇஆர்) ரம்ஜானை முன்னிட்டு இன்று நடைபெறாது

ஷா ஆலம், மார்ச் 12: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்தால் (பிகேபிஎஸ்) நடத்தப்படும் எஹ்சான் ரஹ்மா விற்பனை (ஜேஇஆர்) ரம்ஜானை முன்னிட்டு இன்று நடைபெறாது.

அதனை தொடர்ந்து, மலிவு விற்பனை மார்ச் 13 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் நடைபெறும்.

"அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ரம்ஜான் மற்றும் இனிய நோன்பு வாழ்த்துகள்" என்று முகநூலில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது.   ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5

கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.