ஷா ஆலம், மார்ச் 8: நாளை ஶ்ரீ காயான் அபார்ட்மென்ட் மண்டபம், தாமான் பிங்கிரான் யு எஸ் ஜே 2இல் பத்து தீகா தொகுதியின் சமூக சேவை மையம் ஏற்பாடு செய்துள்ள ரஹ்மா சுகாதார கார்னிவலில் பங்கேற்க சுற்றுப்புற குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் சமூக பாதுகாப்பு அமைப்பின் சுகாதார பரிசோதனை திட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இலவசமாக வழங்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் ஹரோன் தெரிவித்தார்.
"இத்திட்டம் உடல் எடை, இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த சோதனைகள் மூலம் ஆரம்ப நிலை நோயைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"மேலும், இதில் மேமோகிராம் கூப்பன்கள், HPV டிஎன்ஏ சோதனைகள் மற்றும் ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் வவுச்சர்களும் வழங்கப்படும்" என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.
பாடு கவுன்டர் மற்றும் பல்வேறு ஏஜென்சி கவுன்டர்கள் திறப்பதுடன், குழந்தைகளுக்கான சுவாரசியமான நடவடிக்கைகளும் இந்த கார்னிவலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"அவற்றில் 7 முதல் 9 வயது மற்றும் 10 முதல் 12 வயது வரையிலான பிரிவுகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, அழகான குழந்தை போட்டி மற்றும் சூபா டூபா ஆகியவை அடங்கும்.
"இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள், பத்து திகா தொகுதியின் ரஹ்மா சுகாதார கார்னிவலில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்," என்று அவர் கூறினார்.




