ஷா ஆலம், மார்ச் 8: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் நாளை மற்றும் ஞாயிற்றுகிழமை மேலும் எட்டு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.
நாளை PKM பெர்மாதாங் தொகுதி வளாகம் (பெர்மாதாங்), தாமான் பூங்கா ராயா பொது திடல் (சுங்கை பிலேக்), சுராவ் அஸ்-ஷகிரின் (காஜாங்) மற்றும் கொம்லேக்ஸ் நியாகா சுங்கை மெராப் (டெங்கில்) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.
அதனை தொடர்ந்து, மலிவு விற்பனை பிளாட் தாமான் பெர்மாத்தா (டெங்கில்), பத்து கேவ்ஸ் பொது திடல் (சுங்கை துவா), தாமான் லெஸ்தாரி பெர்மாய் (டெங்கில்) மற்றும் எம்பிஏஜே திடல் (பண்டான் இண்டா) ஆகிய இடங்களில் ஞாயிற்றுகிழமை நடைபெறும்.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.




