SELANGOR

பல்வேறு திட்டங்களின் வழி  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மாநில அரசு பாடுபடுகிறது

7 மார்ச் 2024, 9:47 AM
பல்வேறு திட்டங்களின் வழி  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மாநில அரசு பாடுபடுகிறது

ஷா ஆலம், மார்ச் 7: சிலாங்கூரில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

இது சீமென்ஸ், ஆப்பிள் இன்ச் மற்றும் டசால்ட் சிஸ்டம் போன்ற சர்வதேச தொழில்நுட்ப வழங்குநர்களுடனான ஒத்துழைப்பையும் உள்ளடக்கியதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

கடந்த ஆண்டு சிலாங்கூர் திறமையான மற்றும் ஓரளவு திறமையான தொழிலாளர்களால் நிரப்பப்படுவதற்குச் சுமார் 33,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிந்தது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

"இந்த வேலை வாய்ப்புகளுக்குப் பல்வேறு துறைகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் தேவைப்படும் திறன் பகுதிகளையும் உள்ளடக்கியது. எனவே நாங்கள் STDC (சிலாங்கூர் மாநில தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம்) இல் தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சிகளை ஒழுங்கு படுத்துகிறோம்," என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் கூறினார்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிய விரும்பிய செமினி சட்டமன்ற உறுப்பினர் நூசி மாஹவுட்ஸ் அவர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

"சமீபத்தில் நான் மலேசிய தொழில்நுட்ப வாரியத்துடன் ஒரு கூட்டத்தை நடத்தினேன். அதில் யூனி செல்லில் (சிலாங்கூர் பல்கலைக்கழகம்) பொறியியல் வக்குல்டி (புலம்), தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் துறைகளையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

"ஜோம் கெர்ஜா திட்டத்தை நாங்கள் வருடத்திற்கு மூன்று முறை செயல்படுத்துகிறோம். மேலும் மாநில அரசு வழங்கும் ஒதுக்கீட்டைப் பொறுத்து இந்த திட்டத்தை அதிகரிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்," என அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.