ஷா ஆலம், மார்ச் 7: ஜோம் ஷோப்பிங் வவுச்சர் விநியோகம் தகுதியான நபர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக எதிர்க்கட்சி தொகுதிகளும் கண்காணிக்கப்படுகிறது என்று வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும், தனது தரப்பு ஜோம் ஷோப்பிங் வவுச்சர் விநியோகம் நியாயமாகச் செய்யப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. குறிப்பாக ஒருங்கிணைப்பாளர் இல்லாத மாநில சட்டமன்ற தொகுதிகளில் என வீ. பாப்பாராய்டு கூறினார்.
"விநியோகம் நியாயமாக நடக்கிறதா இல்லையா என்பதை நாங்கள் கண்காணிப்போம், ஏனென்றால் ஒருங்கிணைப்பாளர்கள் தவிர, கிராமத் தலைவர்கள், பெங்குலு மற்றும் இந்திய சமூகத் தலைவர்களின் அலுவலகங்கள் மூலமாகவும் நாங்கள் ஜோம் ஷோப்பிங் வவுச்சர்களை விநியோகம் செய்கிறோம்.
"இன்னும் ஒருங்கிணைப்பாளர் இல்லாத மாநில சட்டமன்றத்தில், நியமனம் செய்வதற்கான நடவடிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது," என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு மொத்தம் 82,400 தனிநபர்கள் தலா RM200 மதிப்பிலான பண்டிகை ஜோம் ஷோப்பிங் வவுச்சரைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது என அவர் தெரிவித்தார்.
மாதம் ஒன்றுக்கு பயனாளிகளுக்கான வீட்டு வருமானம் RM2,000 க்குக் குறைவாக இருக்கும் வேண்டும் என்ற வரம்பு தற்போது RM3,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும் என மாற்றப்பட்டது.




