SELANGOR

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் மாநில முதலீடு 39 சதவீதம் பதிவு

7 மார்ச் 2024, 9:25 AM
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் மாநில முதலீடு 39 சதவீதம் பதிவு

ஷா ஆலம், மார்ச் 7: கடந்த ஆண்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு (ஐசிடி) துறையில் மாநில முதலீடு 39 சதவீதம் வரை பதிவாகியது. இது ஊக்கமளிக்கும் வகையில் தொடர்ந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் அத்துறை ஐந்து சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது காலாண்டில் 15 சதவீதம் மற்றும் இறுதியாக மூன்றாவது காலாண்டில் 39 சதவீதமாக பதிவாகியது என முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

"இந்தப் போக்கின் அடிப்படையில், சிலாங்கூரில் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த டிஜிட்டல் பொருளாதாரத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை இது விளக்குகிறது" என்று அவர் கூறினார்.

புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங்கின் கேள்விக்குப் பதிலளித்த அவர், முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) கீழ் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல் படுத்துமாறு மாநில அரசுக்கு தெரிவித்தார்.

"சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார கழகத்தை மாநில அரசு நிறுவியது, அதன் பங்கு IKS தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் பொருளாதாரத்தில் பொருத்தமான பயிற்சி அளிப்பதாகும்.

"இன்வெஸ்ட் சிலாங்கூர் மூலம் தொழில்துறைக் குழுக்களிடையே டிஜிட்டல் முதலீட்டை மாநில அரசு கோடிட்டுக் காட்டியது" என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, மாநில அரசு நிர்ணயித்த இலக்கான RM45 பில்லியனைத் தாண்டி, RM55.3 பில்லியன் மொத்த முதலீட்டைப் சிலாங்கூர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மொத்த முதலீட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள், அதாவது உற்பத்தித் திட்டங்கள் அல்லது உற்பத்தித் துறை ஆகியவை அடங்கும்.

இது 2022இல் பதிவாகிய RM12.2 பில்லியனுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு RM19.3 பில்லியன் அதிகரித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.