ஷா ஆலம், மார்ச் 6: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்தின் (பிகேஎன்எஸ்) நிதி வலுவான நிலையில் உள்ளது மற்றும் எதிர்காலத் திட்டங்களுக்கு நிதி அளிக்க கூடியதாகவும் உள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
கடந்த பிப்ரவரியில் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், ஜூன் 2023 நிலவரப்படி, மாநில அரசின் துணை நிறுவனத்திடம் RM804 மில்லியன் ரொக்கம் உள்ளது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"மேலும், 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பார்க்கும்போது. வருமானம் அதிகரித்துள்ளது. அதில் 2019 மற்றும் 2020 கோவிட் - 19 தொற்று நோய் ஏற்பட்ட காலம் என்பது கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு (2015, 2016, 2017) நிதியின் நிலை எதிர்மறையாக இருந்தது.
"இதற்கு முன் 2014, 2015, 2016, 2017 முழுவதும் ஏற்பட்ட இழப்புகளை நாங்கள் செலுத்த வேண்டியிருந்தது. அவை மிகப் பெரிய தொகையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
"தாமதமான சில திட்டங்களை சிறப்பாகச் சமாளிக்க முடியும், நாம் சிறப்பாகவும் சரியான பாதையில் இருக்கிறோம்" என இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் கூறினார்.
மலேசியன் ரிசோர்சஸ் கார்ப்பரேஷன் பிஎச்டி (எம்ஆர்சிபி) கட்டிடம் மற்றும் கோத்தா டமன்சாராவில் உள்ள நிலத்தின் ஒரு பகுதி உட்பட செயல்படாத சொத்துக்களை விற்பது அதிக கடன் மற்றும் சுமைகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகும் என்று கூட்டத்திற்குப் பிறகு சந்தித்தபோது அவர் கூறினார்.
"டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பிரச்சினையை எழுப்ப விரும்பினார், ஆனால் மூன்று ஆண்டுகளாக மந்திரி புசாராக இருந்த காலத்தில் குறிப்பிட்ட பிரச்சனையைத் தீர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
"சமீபத்திய நிர்வாகம் அதைத் தீர்த்துள்ளது," என்று அவர் கூறினார்.




