SELANGOR

 ``செஹாட்`` திட்டத்தை மாநில அரசு மேம்படுத்தியுள்ளது

6 மார்ச் 2024, 2:45 AM
 ``செஹாட்`` திட்டத்தை மாநில அரசு மேம்படுத்தியுள்ளது

ஷா ஆலம், மார்ச் 6: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மருத்துவ உளவியல் சிகிச்சை அறிமுகப்படுத்தி ``சிலாங்கூர் மெண்டல் சிஹாட்`` (செஹாட்) திட்டத்தை மாநில அரசு மேம்படுத்தியுள்ளது.

மனநல மற்றும் உளவியல் சிகிச்சை மானியங்கள், மாநிலத்தின் குடியிருப்பாளர் களிடையே மனநலப் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகும் என பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

"மேலும், 2021 முதல் செஹாட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மூலம் நல்ல மற்றும் பயனுள்ள மனநலப் பாதுகாப்புக்கு மாநில அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.

"2022 ஆம் ஆண்டு தொடங்கி, சிகிச்சை தேவைப்படுவோருக்கு மனநல மற்றும் உளவியல் சிகிச்சை மானியங்களை அறிமுகப்படுத்தி திட்டத்தை அரசு மேம்படுத்தியுள்ளது.

"இதற்கிடையில், இந்த மனநல சிகிச்சை மானியம் அக்டோபர் 2023 இல் மருத்துவ உளவியலுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது," என்று அவர் நேற்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் கூறினார்.

கோவிட்-19 தொற்று நோய் பாதிப்பிலிருந்து அதிகரித்து வரும் மனநலப் பிரச்சனைகள் கையாள்வதற்காக மாநில அரசு 500,000 ரிங்கிட் ஒதுக்கீட்டில் செஹாட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டம் பயனர்கள் மன ஆரோக்கியத்தின் அளவை 'ஸ்ட்ரெஸ் ஸ்கேன்' மற்றும் 'ரிஸ்க் செக்' ஆகிய ஆரம்பப் பரிசோதனை மூலம் அறிய அனுமதிக்கிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.