SELANGOR

பிகேஎன்எஸ்யின் நிதிநிலை நன்றாக உள்ளது

4 மார்ச் 2024, 8:57 AM
பிகேஎன்எஸ்யின் நிதிநிலை நன்றாக உள்ளது

ஷா ஆலம், மார்ச் 4: பிகேஎன்எஸ்யின் நிதி நல்ல நிலையில் இருப்பதாகவும் அதன் மூலம் லாபம் ஈட்டப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

RM5.7 பில்லியன் கடன் இருப்பதாகவும் மாநில அரசின் துணை நிறுவனத்தின் செயல்பாடு மோசமாக உள்ளதாகவும் சில தரப்பினர் கூறுவதை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மறுத்தார்.

"பிகேஎன்எஸ் இன்னும் முக்கிய செயல்பாட்டு வருமானத்தில் இருந்து வருவாயைப் பெறுகிறது.

"2018 முதல் 2022 வரை பிகேஎன்எஸ்யின் வருமான ஆதாரம் கட்டிட விற்பனை, நில விற்பனை மற்றும் தனியார்மயமாக்கல் ஆகும்.

"அந்த காலகட்டத்தின் முக்கிய வருமானம் மொத்த வருமானத்தில் 60 முதல் 80 சதவிகிதம் வரை நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்தது" என்று அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பிகேஎன்எஸ்-ன் நிதி நிலை குறித்து டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், கோவிட்-19யை எதிர்கொண்ட பிறகு, பிகேஎன்எஸ் தொடர்ந்து செயல்பாட்டு லாபத்தைப் பதிவு செய்யும் என்று அமிருடின் எதிர்பார்த்தார், மேலும் சிலாங்கூர் பொருளாதாரத்தில் பங்களிப்பாளராகவும் தனது பங்கைத் தொடர மாநில அரசும் 15 ஆண்டு திட்டத்தைக் கொண்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.