SELANGOR

அனாக்-அனாக் சீடேக் கண்காட்சியை 8,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்

4 மார்ச் 2024, 8:54 AM
அனாக்-அனாக் சீடேக் கண்காட்சியை 8,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்

ஷா ஆலம், மார்ச் 4: கடந்த ஆண்டு நவம்பரில் டேங் செலாக் ஆடிட்டோரியம், சுல்தான் ஆலம் ஷா அருங்காட்சியகத்தில் தொடங்கப்பட்ட அனாக்-அனாக் சீடேக் கண்காட்சியை 8,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 31 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண் காட்சிக்கு அதிகமான பார்வையாளர்கள் வருகை புரிவார்கள் என்று கலாச்சாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமன் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

"இக்கண்காட்சி முழுவதும் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. மேலும், இந்த நாட்டின் பூப்பந்து ஜாம்பவான்களின் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

"வர்ணம் தீட்டும் போட்டி, புதிர் போட்டி மற்றும் பூப்பந்து எண்ணிக்கையை யூகித்தல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும்" என்று கூறினார்.

இக்கண்காட்சியானது டத்தோ சிடேக் அப்துல்லா கமரின் குடும்பத்தின் வெற்றியின் கதையைச் சொல்கிறது. அவர் தனது ஐந்து மகன்களையும் உலகப் புகழ்பெற்ற பூப்பந்து வீரர்களாக உருவாக்குவதில் வெற்றி பெற்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.