SELANGOR

ஜனவரி 31 வரை 60,843 சிலாங்கூர் கூ வீடுகள் நிர்மாணிப்பு- சட்டமன்றத்தில் தகவல்

4 மார்ச் 2024, 7:47 AM
ஜனவரி 31 வரை 60,843 சிலாங்கூர் கூ வீடுகள் நிர்மாணிப்பு- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், மார்ச் 4 - இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை 60,843

வீடுகளை உள்ளடக்கிய ரூமா சிலாங்கூர் கூ திட்டங்கள்

அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சட்டமன்றத்தில் இன்று

தெரிவிக்கப்பட்டது.

அவற்றில் 37,008 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு

உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வீடமைப்புத் துறைக்கான

ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

எஞ்சிய வீடுகள் இன்னும் நிர்மாணிப்பில் உள்ள வேளையில் இவ்வாண்டு

இறுதிக்குள் மேலும் 5,997 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை நிறைவு

செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 2029ஆம் ஆண்டுக்குள் 200,000 சிலாங்கூர் கூ வீடுகளை

நிர்மாணிக்கும் இலக்கை அடைய முடியும் என நம்புகிறோம். காரணம்

கடந்த ஜனவரி வரை 60,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அங்கீகாரம்

வழங்கப்பட்டு விட்டது என்று அவர் சொன்னார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று புக்கிட் காசிங் உறுப்பினர் ராஜிவ்

ரிக்சியாகாரான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு

குறிப்பிட்டார். 200,000 சிலாங்கூர் கூ வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்ற

மாநில அரசின் தேர்தல் வாக்குறுதியின் நிலை குறித்து அவர்

கேள்வியெழுப்பியிருந்தார்.

மாநிலத்திலுள்ள அனைத்து மக்களும் வசதியான மற்றும் பாதுகாப்பான

குடியிருப்பை பெறுவதை உறுதி செய்வதற்காகக் கட்டுபடி விலை

வீடமைப்புக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தியுள்ளதாக மந்திரி

புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.