ஷா ஆலம், மார்ச் 4: எஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை திட்டத்தில் வழங்கப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் முன்பு போலவே பராமரிக்கப்படும் என்று மாநில அரசு உறுதியளித்துள்ளது.
குறிப்பாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற மாநில அரசின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் தெரிவித்தார்.
"சமீபத்தில் விலை உயர்வு மற்றும் விற்பனைத் திட்டத்தை ஒருங்கிணைப்பதில் சிக்கல் உள்ளது. ஆனால், மாநில அரசு பொருட்களின் பழைய விலையை பராமரிக்க விரும்புகிறது.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரம்ஜான் மற்றும் ஐடில்பித்ரி பெருநாளுக்கு முன்னதாக மாநில அரசு மலிவு விற்பனையை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
"நாங்கள் அவற்றிக்கான இருப்பிடத்தைப் பற்றி விவாதிப்போம், ஆனால் அது ஒரு பிரச்சனை அல்ல, ஏனெனில் விற்பனையை அதிகரிப்பது முக்கியமான விஷயம்," என்று அவர் கூறினார்.




